2-வது நாளாக நடந்தபோலீஸ் உடல் தகுதி தேர்வில் 400 பேர் பங்கேற்பு
தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் நேற்று 2-வது நாளாக நடந்த போலீஸ்காரர்களுக்கான உடல்தகுதித்தேர்வில் 400 பேர் பங்கேற்றனர்.
தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் நேற்று 2-வது நாளாக நடந்த போலீஸ்காரர்களுக்கான உடல்தகுதித்தேர்வில் 400 பேர் பங்கேற்றனர்.
உடல் தகுதி தேர்வு
2-ம் நிலை போலீஸ்காரர்களுக்கான எழுத்துத்தேர்வில் வெற்றி பெற்ற தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 1,022 பேருக்கு உடல்தகுதி தேர்வு தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதைத்தொடர்ந்து நேற்று 2-வது நாளாக 400 பேர் உடல்தகுதி தேர்வில் கலந்து கொண்டனர். முதலில் இவர்களது சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது. பின்னர் 1,500 மீட்டர் ஓட்டப்போட்டி நடத்தப்பட்டது. தொடர்ந்து உயரம், மார்பளவு சரிபார்க்கப்பட்டது.
இன்றும் நடக்கிறது
தஞ்சை சரக டி.ஐ.ஜி. ஜெயச்சந்திரன், போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் ஆகியோர் மேற்பார்வையில் இந்த உடல்தகுதித்தேர்வு நடைபெற்றது.
இன்று (புதன்கிழமை) 222 பேருக்கு உடல்தகுதித்தேர்வு நடைபெற உள்ளது. 2-ம் கட்ட உடல்தகுதித்தேர்வு வருகிற 9-ந் தேதி தொடங்கி, 11-ந் தேதி வரை நடக்கிறது.