போலீசாரின் சிறப்பு மனு விசாரணை முகாம்
பெரம்பலூரில் போலீசாரின் சிறப்பு மனு விசாரணை முகாம் நடைபெற்றது.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் போலீசாரின் சிறப்பு மனு விசாரணை முகாம் நேற்று நடந்தது. இதில், மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மதியழகன் பொதுமக்களிடம் இருந்து 28 கோரிக்கை மனுக்களை பெற்றார். இந்த மனுக்கள் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு நடவடிக்கை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை தோறும் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் போலீசாரின் சிறப்பு மனு விசாரணை முகாம் நடைபெறும். இந்த முகாமில் கலந்து கொள்ள வருபவர்கள் மாவட்ட போலீஸ் அலுவலகம் வருவதற்கு ஏதுவாக போலீசார் சார்பில் பாலக்கரையில் இருந்து போலீஸ் அலுவலகத்திற்கும், மீண்டும் போலீஸ் அலுவலகத்திலிருந்து புதிய பஸ் நிலையம் செல்ல பஸ் வசதி செய்யப்பட்டுள்ளதாக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார்.
Related Tags :
Next Story