திருவண்ணாமலையில் காவல்துறை சிறப்பு மனு விசாரணை முகாம்


திருவண்ணாமலையில் காவல்துறை சிறப்பு மனு விசாரணை முகாம்
x

திருவண்ணாமலையில் காவல்துறை சிறப்பு மனு விசாரணை முகாம் நடந்தது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் காவல்துறை சிறப்பு மனு விசாரணை முகாம் நடந்தது.

திருவண்ணாமலையில் காவல்துறை சிறப்பு மனு விசாரணை முகாம் போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் நடந்தது.

திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வாரந்தோறும் புதன்கிழமையன்று சிறப்பு மனு விசாரணை முகாம் நடைபெற்று வருகின்றது. இதில் காவல் துறை மூலம் தீர்க்கப்பட வேண்டிய கோரிக்கைகள் குறித்து பொதுமக்கள் மனு அளித்து வருகின்றனர்.

அதன்படி நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சிறப்பு மனு விசாரணை முகாம் நடைபெற்றது. போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை நேரடியாக பெற்று விசாரணை நடத்தினார்.

முகாமில் சைபர் கிரைம் பிரிவு மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பழனி, தலைமையக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் சுமார் 25-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெற்றனர். பின்னர் அதன் மீது சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களில் தொடர் விசாரணை மேற்கொள்ள போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.


Next Story