போலீஸ் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் படுகாயம்


போலீஸ் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் படுகாயம்
x

சரக்கு வாகனம் மோதி போலீஸ் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் படுகாயம்

விழுப்புரம்

விழுப்புரம்

விழுப்புரம் காகுப்பத்தில் உள்ள ஆயுதப்படை பிரிவில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் பொன்னியின்செல்வன்(வயது 54). விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்று விட்டு சென்னை திரும்பிய மாநில மகளிர் மேம்பாட்டு ஆணைய தலைவர் குமரிக்கு நேற்று முன்தினம் மாலையில் வழிக்காவல் பணியாக சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பொன்னியின்செல்வன் சென்றார். விழுப்புரம் சிந்தாமணி பகுதியில் செல்லும்போது அங்கு ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை சரிசெய்யும் பணியில் ஈடுபட்ட பொன்னியின்செல்வன் மீது அதே திசையில் வந்த சரக்கு வாகனம் மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து தொடர்பாக சரக்கு வாகன டிரைவர் திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பாக்கம் அருகே உள்ள செந்தூரபுரம் கிராமத்தை சேர்ந்த உலகநாதன் மகன் விஜய்(23) என்பவர் மீது விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story