கோவில் செயல் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரிதலைவாசல் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்


கோவில் செயல் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரிதலைவாசல் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
x
சேலம்

தலைவாசல்

தலைவாசல் அருகே தேவியாக்குறிச்சி கிராமத்தில் பழமை வாய்ந்த சிவகாமி உடனுறை சிதம்பரேஸ்வரர் கோவில் உள்ளது. மேலும் அதே கிராமத்தில் அய்யனார், பிடாரியம்மன் கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களில் வர்ணம் தீட்டப்பட்டு கோவில் கும்பாபிஷேகம் நடத்துவதற்காக ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்த கும்பாபிஷேக விழா நடத்துவது சம்பந்தமாக தேவியாக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் முன்னிலையில் கோவில் செயல் அலுவலர் சங்கர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பொதுமக்கள் கருத்துக்கு மாறாக தன்னிச்சையாக செயல் அலுவலர் முடிவெடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் கும்பாபிஷேக விழா நடத்த ஏற்பாடு செய்ய செயல் அலுவலர் ஒத்துழைப்பு தர வேண்டும். தன்னிச்சையாக செயல்படும் செயல் அலுவலர் சங்கர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் நேற்று தலைவாசல் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து பொதுமக்கள் போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகுராணியிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story