அழகுமுத்துக்கோன் பிறந்தநாள் விழாவுக்கு மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்களை தடுத்து நிறுத்திய போலீசார்


அழகுமுத்துக்கோன் பிறந்தநாள் விழாவுக்கு மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்களை தடுத்து நிறுத்திய போலீசார்
x

நாங்குநேரி அருகே அழகுமுத்துக்கோன் பிறந்தநாள் விழாவுக்கு மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

திருநெல்வேலி

நாங்குநேரி:

வீரன் அழகுமுத்துக்கோன் குருபூஜை விழாவிற்கு அனுமதி இல்லாமல் ராதாபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் மோட்டார் சைக்கிள்களில் கூட்டமாக நாங்குநேரி தாலுகா அலுவலகம் முன்பு செல்லும் நான்கு வழிச்சாலையில் வந்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த துணை போலீஸ் சூப்பிரெண்டு ராஜூ தலைமையிலான போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். அவர்களிடம் கார்களில் செல்லுமாறு வலியுறுத்தினர். இதனை ஏற்று அவர்கள் திரும்பிச் சென்றனர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பாக காணப்பட்டது.


Next Story