மாங்காட்டில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரின் மோட்டார் சைக்கிள் 'அபேஸ்'


மாங்காட்டில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரின் மோட்டார் சைக்கிள் அபேஸ்
x

மாங்காட்டில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரின் மோட்டார் சைக்கிளை ‘அபேஸ்’ செய்த திருடனை போலீசார் மடக்கி பிடித்த நிலையில், கண்ணில் மண்ணை தூவி விட்டு அங்கிருந்து தப்பிச்சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

காஞ்சிபுரம்

மோட்டார் சைக்கிள் திருட்டு

மாங்காடு போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் சப்-இன்ஸ்பெக்டர் முகலிவாக்கத்தில் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிளை மர்ம நபர் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருடி சென்றனர்.

இதுகுறித்து மாங்காடு போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், மாங்காடு போலீசார் சம்பவம் நடந்த இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து மாங்காடு அடுத்த கெருகம்பாக்கத்தை சேர்ந்த விஷ்ணு (வயது 20) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து திருடப்பட்ட சப்-இன்ஸ்பெக்டரின் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். மேலும் கைது செய்யப்பட்ட விஷ்ணு மீது பல்வேறு மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்குகள் இருப்பது தெரியவந்தது.

தப்பிச்சென்ற திருடன்

இதையடுத்து கெருகம்பாக்கம் பகுதியில் மறைத்து வைத்திருக்கும் மோட்டார் சைக்கிளை காண்பித்து கொண்டிருந்த போது திடீரென போலீசாரின் கண்ணில் மண்ணை தூவி விட்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி சென்றார். இதனை சற்றும் எதிர்பார்க்காத போலீசார் அந்த நபரை விரட்டிச் சென்று பிடிக்க முயன்றனர். ஆனால் கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி சென்றதால் உஷாரான மாங்காடு தனிப்படை போலீசார் தப்பி ஓடிய விஷ்ணுவை தீவிரமாக தேடி வருகின்றனர். திருட்டு வழக்கில் தொடர்புடைய நபரிடமிருந்து மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்ய அழைத்து சென்றபோது, போலீசாரின் பிடியிலிருந்து திருடன் தப்பி ஓடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story