தற்காலிக காவலர் பயிற்சி பள்ளியில் போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
திருவண்ணாமலையில் உள்ள தற்காலிக காவலர் பயிற்சி பள்ளியில் போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தற்காலிக காவலர் பயிற்சி பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பயிற்சி பள்ளியை திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டும், பயிற்சி பள்ளியின் முதல்வருமான பவன்குமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அங்கு பயிற்சி மேற்கொண்டு வரும் காவலர்களிடம் குறைகளையும், அடிப்படை வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார். அதைத் தொடர்ந்து 2 மாதத்திற்கு ஒருமுறை நடக்கும் தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த பயிற்சி காவலர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார். அப்போது உதவி போலீஸ் சூப்பிரண்டு ராஜகாளீஸ்வரன் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story