திருச்செந்தூரில் போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூரில் போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வைகாசி விசாக திருவிழா நடக்கிறது. இதையடுத்து, தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் கோவில் வளாகம், வாகனங்கள் நிறுத்துமிடம், கடற்கரை பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் போலீசாரின் பாதுகாப்பு பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார். திருவிழாவிற்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மேற்பார்வையில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் உட்பட 600-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த ஆய்வில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் இணை ஆணையர் கார்த்திக், திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆவுடையப்பன், அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவுரி மனோகரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story