கலவரத்தை தடுக்க போலீசாருக்கு பயிற்சி


கலவரத்தை தடுக்க போலீசாருக்கு பயிற்சி
x

கலவரத்தை தடுக்க போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது

கோயம்புத்தூர்

கோவை மாநகர ஆயுதப்படை மற்றும் சட்டம்-ஒழுங்கு போலீஸ் நிலையங்களில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு கலவர தடுப்பு கவாத்து பயிற்சி அவினாசி ரோடு பி.ஆர்.எஸ். மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். இதில் கலவரத்தில் ஈடுபடுபவர்களை கலைப்பது, தடுப்பது? குறித்து தத்ரூபமாக செய்து காட்டி பயிற்சி அளிக்கப்பட்டது.

மேலும் ஒலிபெருக்கி, கண்ணீர் புகை வீசி கலவரத்தை கட்டுப்படுத்துதல், லத்தியை கொண்டு கலவரத்தை கையாளுதல் மற்றும் துப்பாக்கியை கொண்டு கலவரத்தை கட்டுப்படுத்துதல் தொடர்பான பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

இதில் கலவரக்காரரை போலீசார் துப்பாக்கியால் சுடுவது போன்றும், காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

இதில் இன்ஸ்பெக்டர்கள், சப்- இன்ஸ்பெக்டர் கள் உள்பட மொத்தம் 196 போலீசார் பயிற்சி பெற்றனர். இதில் ஆயுதப்படை போலீஸ் துணை கமிஷனர் முரளிதரன், உதவி கமிஷனர் சேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story