தனியார் பஸ் டிரைவர்களை எச்சரித்த போலீசார்


தனியார் பஸ் டிரைவர்களை எச்சரித்த போலீசார்
x

தனியார் பஸ் டிரைவர்களை போலீசார் எச்சரித்தனர்.

திருச்சி

திருச்சி:

திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து சத்திரம் பஸ் நிலையத்துக்கு ஏராளமான தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஒரு சில நேரங்களில் தனியார் பஸ்கள் மாநகருக்குள் போட்டி போட்டு கொண்டு ஒன்றை ஒன்று முந்தி செல்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று காலை மத்திய பஸ் நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கத்துக்கு தனியார் பஸ் ஒன்று புறப்பட்டது. அதேசமயம் சத்திரம் பஸ் நிலையத்துக்கு செல்லக்கூடிய மற்றொரு பஸ்சும் வேகமாக புறப்பட்டது.

இரு பஸ்களும் மத்திய பஸ்நிலையம் அருகே முந்திச்செல்ல போட்டி போட்டன. அப்போது வளைவில் திரும்பியபோது, அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம் மீது மோதுவது போல் சென்றது. இதில் இருசக்கர வாகனம் ஓட்டி வந்தவர் தடுமாறி கீழே விழுந்தார். இதை கண்டு அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இரு தனியார் பஸ்களையும் சுற்றி வளைத்து நிறுத்தினர். பின்னர் பஸ்களை ஓரமாக நிறுத்த கூறி, டிரைவர்களை அழைத்து கடுமையாக எச்சரித்து அனுப்பினர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் நேற்று காலை சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story