அரசு பஸ் மோதி போலீஸ்காரர் சாவு


அரசு பஸ் மோதி போலீஸ்காரர் சாவு
x
தினத்தந்தி 15 May 2023 12:15 AM IST (Updated: 15 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பிறந்த குழந்தையை பார்க்க வந்த இடத்தில் பரமக்குடி அருகே அரசு பஸ் மோதி போலீஸ்காரர் பலியானார்.

ராமநாதபுரம்

பரமக்குடி,

பிறந்த குழந்தையைபார்க்க வந்த இடத்தில் பரமக்குடி அருகே அரசு பஸ் மோதி போலீஸ்காரர் பலியானார்.

பிறந்த குழந்தையை பார்க்க வந்தார்

ராமநாதபுரம் பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் குணாராஜ்(வயது 35). இவர் சென்னை வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் போக்குவரத்து போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தார்.

தற்போது அவரது மனைவிக்கு பெண் குழந்தை பிறந்ததால் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார். பரமக்குடி அரசு மருத்துவமனையில் பிறந்த அவரது குழந்தையை பார்த்துவிட்டு மோட்டார் சைக்கிளில் நேற்று முன்தினம் இரவு ராமநாதபுரம் நோக்கி சென்றார்.

போலீஸ்காரர் சாவு

அப்போது தபால் சாவடி கிராமம் அருகே சென்றபோது ராமேசுவரத்தில் இருந்து கோவை நோக்கி சென்ற அரசு பஸ், அவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் குணா ராஜ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் சத்திரக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்த குணாராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரமக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து சத்திரக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சோகம்

பிறந்த குழந்தையை ஆசையோடு பார்த்துவிட்டு வீடு திரும்பிய நேரத்தில் பஸ் மோதி போலீஸ்காரர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

போலீஸ்காரரின் மனைவி தான் பிறந்த குழந்தையுடன் பரமக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவதும், விபத்தில் பலியான போலீஸ்காரரின் உடல் பரமக்குடி ஆஸ்பத்திரி பிணவறையில் இருந்ததும் அறிந்த உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.


Related Tags :
Next Story