ஆட்டோ மோதி போலீஸ்காரர் காயம்


ஆட்டோ மோதி போலீஸ்காரர் காயம்
x

கலவை அருகே ஆட்டோ மோதி போலீஸ்காரர் காயம் அடைந்தார்.

ராணிப்பேட்டை

கலவை அருந்ததி பாளையத்தை சேர்ந்த சம்பத் என்பவரது மகன் வெங்கடேசன், வாைழப்பந்தல் போலீஸ் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு பணி முடித்து விட்டு கலவை- வாைழப்பந்தல் சாலையில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அருகே மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது எதிரே அதிவேகமாக வந்த ஆட்டோ போலீஸ்காரர் வெங்கடேசன் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் காயம் அடைந்த வெங்கடேசன் கலவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, பின்னர் மேல் சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து கலவை சப்- இன்ஸ்பெக்டர் சரவணமூர்த்தி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

1 More update

Related Tags :
Next Story