பெண் போலீசின் கணவர் தற்கொலை


பெண் போலீசின் கணவர் தற்கொலை
x
தினத்தந்தி 23 Oct 2022 12:15 AM IST (Updated: 23 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் பெண் போலீசின் கணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

கோயம்புத்தூர்


கோவையில் பெண் போலீசின் கணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

பெண் போலீஸ்

கோவை இருகூர் அருகே உள்ள ஐ.ஓ.பி.காலனியை சேர்ந்தவர் சதீஷ் (வயது 31). இவர் காந்திபுரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் உடற்பயிற்சி ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி ராஜலட்சுமி (28).

இவர் கோவை போலீஸ் பயிற்சி பள்ளியில் இரண்டாம் நிலை பெண் காவலராக பயிற்சி பெற்று, கடந்த சில நாட்களுக்கு முன்புதான் பணியில் சேர்ந்தார்.

தற்கொலை

சதீஷ்-ராஜலட்சுமி இருவரும் காதலித்து கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சதீஷ் கடந்த சில நாட்களாக மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால் அவர் 3 முறை தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த சதீஷ், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பணி முடிந்து வீட்டிற்கு வந்த ராஜலட்சுமி தனது கணவர் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

விசாரணை

உடனடியாக இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசுக்கு தகவல் கொடுத்தார். இதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சதீஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி வழக்குப்பதிவு செய்து செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story