பாமாயில் இறக்குமதி ஒப்பந்தத்தை தமிழக அரசு கைவிட வேண்டும்


பாமாயில் இறக்குமதி ஒப்பந்தத்தை தமிழக அரசு கைவிட வேண்டும்
x

பாமாயில் இறக்குமதி ஒப்பந்தத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று உழவர் உழைப்பாளர் கட்சித்தலைவர் செல்லமுத்து தெரிவித்தார்.

திருப்பூர்

பல்லடம், மே.15-

பாமாயில் இறக்குமதி ஒப்பந்தத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று உழவர் உழைப்பாளர் கட்சித்தலைவர் செல்லமுத்து தெரிவித்தார்.

பல்லடத்தில் உழவர் உழைப்பாளர் கட்சித்தலைவர் செல்லமுத்து நிருபர்களிடம் கூறியதாவது:-

தேங்காய் எண்ணெய்

தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிப கழகம் சமீபத்தில் 200 லட்சம் லிட்டர் பாமாயில் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்த புள்ளியை வெளியிட்டதாக தெரிய வருகிறது. தேங்காய்க்கு உரிய விலை கிடைக்கவில்லை. கொப்பரைக்கும் உரிய விலை கிடைப்பதில்லை. எனவே நீண்ட காலமாக ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகிறோம். சமீபத்தில் கோவையில் நிருபர்்களிடம் பேசிய உணவுத்துறை அமைச்சர் ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

ரேஷன் கடைகளில் வினியோகம்

இந்த நிலையில், நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் இந்த பாமாயில் ஒப்பந்த புள்ளி அறிவிப்பு விவசாயிகளுக்கு அதிர்ச்சி அளிக்கிறது. தென்னை விவசாயிகளை காப்பாற்றவும், உள்ளூர் வணிகத்தை ஊக்குவிக்கவும், தமிழ்நாடு அரசு பாமாயில் இறக்குமதி ஒப்பந்த புள்ளியை ரத்து செய்து, ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தென்னை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் உரம், இடுபொருட்களுக்கு அரசு மானியம் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.



Related Tags :
Next Story