அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்
கபிஸ்தலம் பாலக்கரையில் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது
கபிஸ்தலம்;
கபிஸ்தலம் பாலக்கரையில் பாபநாசம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் கிழக்கு ஒன்றிய செயலாளர் பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. மேற்கு ஒன்றிய செயலாளர் கோபிநாதன் வரவேற்று பேசினார். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ராம்குமார், இளமதி சுப்பிரமணியன், ராமநாதன், கும்பகோணம் கிழக்கு ஒன்றிய செயலாளர் அறிவழகன், மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் சண்முகபிரபு, மாவட்ட கவுன்சிலர் கண்ணபிரான், விவசாய தலைவர் அண்ணாமலை, பொதுக்குழு உறுப்பினர் மோகன், பாபநாசம் பேரூர் செயலாளர் சின்னையன், அய்யம்பேட்டை பேரூர் செயலாளர் கோவிந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக ஜெயலலிதா பேரவை மாநில இணைச்செயலாளர் காந்தி, தலைமைக் கழக பேச்சாளர்கள் கோமுகிதாசன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். முடிவில் அம்மாப்பேட்டை தெற்கு ஒன்றிய செயலாளர் சூரிய நாராயணன் நன்றி கூறினார்.