காமராஜர் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை


காமராஜர் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை
x
தினத்தந்தி 15 July 2023 6:45 PM GMT (Updated: 15 July 2023 6:46 PM GMT)

காமராஜர் பிறந்த நாள் விழாைவயொட்டி விருதுநகர் மாவட்டத்தில் காமராஜர் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

விருதுநகர்


காமராஜர் பிறந்த நாள் விழாைவயொட்டி விருதுநகர் மாவட்டத்தில் காமராஜர் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

சிலைக்கு மாலை அணிவிப்பு

பெருந்தலைவர் காமராஜரின் 121-வது பிறந்தநாளையொட்டி மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன் ஆகியோர் தலைமையில் அ.தி.மு.க.வினர் காமராஜர் நூற்றாண்டு விழா மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். உடன் மேற்கு மாவட்ட அவை தலைவர் விஜயகுமரன், ஸ்ரீவில்லிபுத்தூர் எம்.எல்.ஏ.மான் ராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மன், விருதுநகர் நகர செயலாளர் முகம்மது நயினார், ஒன்றிய செயலாளர்கள் கண்ணன், தர்மலிங்கம், மச்சராஜா, ஜெயலலிதா பேரவை மாவட்ட இணை செயலாளர் சரவணகுமார் ஆகியோர் இருந்தனர்.

பா.ஜ.க. கிழக்கு மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் தலைமையில் பா.ஜ.க.வினர் காமராஜர் நினைவு இல்லத்தில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாநில பொதுக்குழு உறுப்பினர் சந்திரசேகரன், செயற்குழு உறுப்பினர் கஜேந்திரன் மற்றும் நிர்வாகிகள் உடன் சென்றனர்.

மக்கள் நீதி மய்யம்

விருதுநகர் மத்திய மாவட்ட மக்கள் நீதி மய்ய செயலாளர் காளிதாஸ் தலைமையில் அக்கட்சியினர் காமராஜர் நினைவு இல்லத்தில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். உடன் நகர செயலாளர் கமல் கண்ணன், ஒன்றிய செயலாளர் நாகேந்திரன் மற்றும் நிர்வாகிகள் இருந்தனர்.

தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட தலைவர் ராஜபாண்டி தலைமையில் அக்கட்சியினர் காமராஜர் நூற்றாண்டு மணிமண்டபத்தில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். உடன் கட்சி நிர்வாகிகள் கண்ணன், முருகன், முத்துச்சாமி ஆகியோர் இருந்தனர்.

ஓ. பன்னீர்செல்வம் அணி மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற அவைத்தலைவர் ஜெயக்கொடி தலைமையில் கட்சியினர் நூற்றாண்டு மணிமண்டபத்தில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் சுரேஷ்குமார், நித்யானந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story