போக்குவரத்திற்கு இடையூறாக அரசியல் கட்சியினர் பதாகைகள் வைக்கக்கூடாது
போக்குவரத்திற்கு இடையூறாக அரசியல் கட்சியினர் பதாகைகள் வைக்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டது.
பெரம்பலூர்
பெரம்பலூரில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவியின் உத்தரவின்படி, அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. இதற்கு பெரம்பலூர் சரக போலீஸ் துணை சூப்பிரண்டு பழனிசாமி தலைமை தாங்கி அரசியல் கட்சியினரிடையே பேசுகையில், தங்களது பகுதியில் அரசியல் கட்சி தொடர்பான நிகழ்ச்சியில் அதிக பதாகைகள் வைப்பதை தவிர்க்க வேண்டும். முக்கிய நிகழ்விற்காக வைக்கப்படும் பதாகைகளை அதிகப்பட்சமாக 3 நாட்களுக்குள் எடுத்துவிட வேண்டும். அவ்வாறு வைக்கப்படும் பதாகைகள் போக்குவரத்திற்கு இடையூறாகவும், பொது மக்களை அச்சுறுத்தும் வகையிலும் இருக்க கூடாது, என்றார்.
Related Tags :
Next Story