இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை
மயிலாடுதுறை;
மணிப்பூரில் அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மணிப்பூர் மாநிலத்தில் நடந்து வரும் கலவரத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டு வழிபாட்டுத் தலங்கள் தீக்கிரையாக்கப்பட்டு உள்ளன. எனவே மணிப்பூரில் நடக்கும் கலவரத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
Related Tags :
Next Story