மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை
மயிலாடுதுறை;
சேலத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் தாக்கப்பட்டதைக் கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மயிலாடுதுறையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு, கட்சியின் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமை தாங்கினார். மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஸ்டாலின், துரைராஜ், சிம்சன், மார்க்ஸ், ஏ. ரவிச்சந்திரன், விஜயகாந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஆர்ப்பாட்டத்தில் சேலம் மாவட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பெரியசாமி லாட்டரி விற்பனையாளர்களால் தாக்கப்பட்டதை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
Related Tags :
Next Story