காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

மணிப்பூர் கலவரத்தை கண்டித்து கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்

கும்பகோணம்;

மணிப்பூர் மாநில கலவரத்தை தடுக்க தவறிய மத்திய அரசை கண்டித்து கும்பகோணத்தில் தஞ்சை வடக்கு மாவட்ட காங்கிரஸ் விவசாய பிரிவு சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு தஞ்சை வடக்கு மாவட்ட காங்கிரஸ் விவசாயப் பிரிவு தலைவர் கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார். மாநில பொது செயலாளர் வெங்கடேஷ், மாநகராட்சி கவுன்சிலர் அய்யப்பன், சுவாமிமலை நகர தலைவர் ராமலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.


Next Story