பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்


பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
x

தஞ்சையில் மின் கட்டண உயர்வை கண்டித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்


தஞ்சை ரெயிலடியில் தெற்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் நேற்றுகாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு தெற்கு மாவட்ட தலைவர் ஜெய்சதீஷ் தலைமை தாங்கினார். மாவட்ட பார்வையாளர் முரளிகணேஷ், செயற்குழு உறுப்பினர்கள் பெரியநாயகி, பாண்டித்துரை, கர்ணன், வெங்கடேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் விழுப்புரம் மாவட்ட பார்வையாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கலிவரதன் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார்.தமிழகத்தில் மின் கட்டணம், சொத்து வரியை உயர்த்திய தி.மு.க. அரசை கண்டித்தும், உடனடியாக மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தக் கோரியும், சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.இதில் மாவட்ட பொதுச் செயலாளர்கள் துரை, முரளி, வீரா, பொருளாளர் விநாயகம், டாக்டர்கள் பாரதிமோகன், நெப்போலியன், வக்கீல் ராஜேஸ்வரன் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.


Next Story