அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்
எடப்பாடி பழனிசாமி மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்
திருவிடைமருதூர்;
எடப்பாடி பழனிசாமி மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தில் அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. ஆர்.கே.பாரதிமோகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர்கள் ஏ.வி.கே.அசோக்குமார், ஜி.முத்துகிருஷ்ணன், திருபுவனம் நகரக் கழக செயலாளர் சிங். செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story