மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 6 Jun 2023 3:40 AM IST (Updated: 6 Jun 2023 3:18 PM IST)
t-max-icont-min-icon

பாபநாசத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்

பாபநாசம்;

பாபநாசத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய செயலாளர் முரளிதரன் தலைமை தாங்கினாா்.ஆர்ப்பாட்டத்தில் பாபநாசம் நகரத்துக்கு நிரந்தரமாக போக்குவரத்து காவலரை நியமிக்க வேண்டும், சுவாசத்தில் ஆல்கஹாலின் அளவை கணக்கிடும் கருவிகளை அனைத்து போலீஸ் நிலையங்களுக்கு வழங்க வேண்டும். பொதுமக்கள் கொடுக்கும் புகார் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் மாநில குழு உறுப்பினர் டெல்லி பாபு, மாவட்ட செயலாளர் சின்னை பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனா்.


Next Story