பா.ஜனதா கட்சியினர் சாலை மறியல்
தஞ்சையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க அனுமதிக்காததை கண்டித்து பா. ஜனதா கட்சியினர் ஊரணிபுரத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது
ஒரத்தநாடு;
தஞ்சையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க அனுமதிக்காததை கண்டித்து பா. ஜனதா கட்சியினர் ஊரணிபுரத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது
அம்பேத்கர் நினைவு நாள்
டாக்டர் அம்பேத்கர் நினைவு நாளையொட்டி நேற்று தஞ்சையை அடுத்துள்ள மறியல் கிராமத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க சென்ற பா.ஜனதா கட்சியினருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதை கண்டித்து பா. ஜனதா கட்சியினர் நேற்று ஊரணிபுரத்தில் பட்டுக்கோட்டை -கந்தர்வக்கோட்டை பிரதான சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து பதிப்பு
போராட்டத்தில் பா. ஜனதா கட்சி மாநில விவசாய அணி துணைத் தலைவர் இளங்கோ, மாவட்ட பொதுச்செயலாளர்கள் உஞ்சியவிடுதி துரை மற்றும் வீரசிங்கம், மாவட்ட செயலாளர் சக்கரவர்த்தி, திருவோணம் தெற்கு ஒன்றிய தலைவர் காளிமுத்து, ஒன்றிய பார்வையாளர் சிவக்குமார், ஒன்றிய பொதுச்செயலாளர்கள் இளையராஜா, கண்ணன், ஒன்றிய இளைஞரணி தலைவர் அரவிந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற திருவோணம் போலீசார் மறியல் ஈடுபட்ட பா. ஜனதா பிரமுகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து அவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியல் காரணமாக அந்த பகுதியில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.