பொள்ளாச்சி நகர பா.ஜனதா சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு அன்னதானம்
பொள்ளாச்சி நகர பா.ஜனதா சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு அன்னதானம்
கோயம்புத்தூர்
பொள்ளாச்சி
பொள்ளாச்சி நகர பா.ஜனதா சார்பில் பிரதமர் நரேந்திரமோடியின் 72-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி பொள்ளாச்சி மகாலிங்கபுரம் சக்தி விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. பொள்ளாச்சி நகர பகுதியில் 4 இடங்களில் கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் இளைஞர் அணி சார்பில் 10 யூனிட் ரத்ததானம் வழங்கப்பட்டது. மேலும் உள்நோயாளிகளுக்கு பிஸ்கட், ரொட்டி வழங்கினர். பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரி, நகராட்சி தூய்மை பணியாளர்கள், நோயாளிகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிகளுக்கு நகர தலைவர் பரமகுரு தலைமை தாங்கினார். இதில் பா.ஜனதா நிர்வாகிகள் டாக்டர் ஜெயமுருகன், டாக்டர் ராஜ்மோகன், வக்கீல்கள் நித்தின், துரை, பரணிக்கா, சிவப்பிரகாஷ், மணிகண்டகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story