வாக்குச்சாவடி அலுவலர்கள் வீடு, வீடாக சென்று விவரங்கள் சேகரிப்பு


வாக்குச்சாவடி அலுவலர்கள் வீடு, வீடாக சென்று விவரங்கள் சேகரிப்பு
x

வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணிக்காக வாக்குச்சாவடி அலுவலர்கள் வீடு, வீடாக சென்று விவரங்கள் சேகரிக்கப்பட்டது.

திருவண்ணாமலை

இந்திய தேர்தல் ஆணையம் அறிவுரையின்படி வாக்காளர் பட்டியலில் இடம் பெற்று உள்ளவர்களின் ஆதார் எண் விவரங்களை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதற்கான சிறப்பு பணியாக திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று வாக்குச்சாவடி அலுவலர்கள் வீடு, வீடாக சென்று ஆதார் எண் விவரங்களை பெற்று படிவம் 6 பி-ல் சம்பந்தப்பட்ட வாக்காளர்கள் விவரங்கள் பூர்த்தி செய்தனர்.

திருவண்ணாமலையில் நடைபெற்ற இந்த பணியை திருவண்ணாமலை தாசில்தார் சுரேஷ் தலைமையில் தேர்தல் பிரிவு அலுவலர்கள் பொன்விழி, பாலசுப்பிரமணியன், சிவக்குமார், பிரதா ஆகியோர் கொண்ட குழுவினர் நேரில் சென்ற ஆய்வு செய்தனர்.

மேலும் இதுகுறித்து தாசில்தார் கூறுகையில், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் விவரங்கள் இணைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

வாக்காளர்கள் இந்திய தேர்தல் ஆணைய இணையதளம் www.nvsp.in மற்றும் மொபைல் செயலி Voter Helpline App மூலமாகவும் வாக்காளர்கள் நேரடியாக ஆதார் விவரங்களை பதிவு செய்யலாம் என்றார்.


Next Story