போளூர் ரெயில்வே மேம்பால பணிகள் விரைந்து முடிக்கப்படும்; அமைச்சர் எ.வ.வேலு பேச்சு


போளூர் ரெயில்வே மேம்பால பணிகள் விரைந்து முடிக்கப்படும்; அமைச்சர் எ.வ.வேலு பேச்சு
x

போளூர் ரெயில்வே மேம்பால பணிகள் விரைந்து முடிக்கப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

திருவண்ணாமலை

போளூர் ரெயில்வே மேம்பால பணிகள் விரைந்து முடிக்கப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

அடிக்கல் நாட்டு விழா

திருவண்ணாமலை மாவட்டம் போளூரை அடுத்த வடமாதிமங்கலம் ஊராட்சியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் முதல்-அமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்தில் ஆரணி-எட்டிவாடி சாலை 4 வழி சாலையாக அகலப்படுத்தும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. விழாவில் அமைச்சர் எ.வ.வேலு கலந்துகொண்டு, அடிக்கல் நாட்டி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கனவு திட்டமான சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஆரணி-எட்டிவாடி சாலையில் நெடுஞ்சாலைத்துறை மூலம் ரூ.130 கோடி மதிப்பீட்டில் 15½ கிலோ மீட்டர் தூரம் 4 வழிச்சாலை அமைப்பதற்கான பணி இன்று (நேற்று) தொடங்கப்பட்டுள்ளது.

ரெயில்வே பணிகளை...

இந்த பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். திராவிட மாடல் அரசு எப்போதெல்லாம் அமைகிறதோ அப்போதெல்லாம் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களும் சிறப்பான வளர்ச்சி அடைந்து வருகிறது.

போளூர் ெரயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க அரசு கவனம் செலுத்தி வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, கலெக்டர் பா. முருகேஷ், நெடுஞ்சாலைத்துறை முதன்மை பொறியாளர் சந்திரசேகர், கண்காணிப்பு பொறியாளர் பழனிவேல், கோட்ட பொறியாளர் முரளி, ஆரணி வருவாய் கோட்டாட்சியர் தனலட்சுமி, உதவி கோட்ட பொறியாளர் கோவிந்தசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story