குளத்தை மூட எதிர்ப்பு: அம்மாபாளையம் கிராம மக்கள் உண்ணாவிரதம்


குளத்தை மூட எதிர்ப்பு: அம்மாபாளையம் கிராம மக்கள் உண்ணாவிரதம்
x

குளத்தை மூட எதிர்ப்பு தெரிவித்து அம்மாபாளையம் கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர்

பெரம்பலூர் அருகேயுள்ள அம்மாபாளையம் கிராமத்திலுள்ள குளத்தை சிலர் குப்பைகளை கொட்டி மூடுவதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அம்மாபாளையம் பஸ் நிலையம் அருகே சசிகுமார் தலைமையில் 20-க்கும் மேற்பட்டோர் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜலிங்கம் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். அப்போது அவரிடம் கிராம மக்கள் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

4-வது வார்டு மாரியம்மன் கோவில் தெருவில் மயான சாலை செல்லும் வழியில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்க வேண்டும். அதே வழித்தடத்திலுள்ள குடிநீ்ர் குழாயை சரி செய்ய வேண்டும். ஊராட்சியில் 60 ஆண்டுகளுக்கு முன்பு வேளாண்மைத்துறைக்கு இடம் ஒதுக்கி இதுவரை பராமரிப்பின்றி உள்ளதால், அந்த நிலத்தை திரும்ப ஊராட்சிக்கு வழங்க வேண்டும் என அதில் கூறப்பட்டு இருந்தது.


Next Story