50 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இருந்த குளம் மீட்பு

50 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இருந்த குளம் மீட்பு
x

திருமருகல் அருகே 50 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இருந்த குளம் மீட்கப்பட்டு ரூ.6.62 லட்சத்தில் தூர்வாரும் பணிகள் தொடங்கின.

நாகப்பட்டினம்

திட்டச்சேரி;

திருமருகல் அருகே 50 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இருந்த குளம் மீட்கப்பட்டு ரூ.6.62 லட்சத்தில் தூர்வாரும் பணிகள் தொடங்கின.

குளம் மீட்பு

திருமருகல் ஒன்றியம் திருப்புகலூர் ஊராட்சியில் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமிப்பில் இருந்த அல்லிக்குளம் மீட்கப்பட்டு தற்பொழுது தூர்ந்துபோன குளம் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை கலெக்டர் அருண் தம்புராஜ் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை செயற்பொறியாளர் பசுபதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பார்வையிட்டனா்.

ரூ.6½ லட்சம்

மேலும் ஆக்கிரமிப்பில் உள்ள குளத்தை தூர்வாரி படித்துறை மற்றும் சுற்றுச்சுவர் கட்ட 15-வது நிதிக்குழு மூலம் ரூ.6 லட்சத்து 62 ஆயிரத்தை ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்று வருகிறது.தற்போது பொக்லின் எந்திரம் மூலம் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை ஊராட்சி தலைவர் கார்த்திகேயன், ஒன்றிய பொறியாளர் செந்தில், ஊராட்சி செயலாளர் ஜெய்சங்கர் ஆகியோர் பார்வையி்ட்டனர்.

Next Story