பென்னாகரத்தில் சமத்துவ பொங்கல் ஜி.கே.மணி எம்.எல்.ஏ. பங்கேற்பு

பென்னாகரம்:
பென்னாகரத்தில் தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பொங்கல் வைத்து, அதனை பொதுமக்கள் மற்றும் மாடுகளுக்கு வழங்கினார். இதைத்தொடர்ந்து கலைஞர்களின் கோலாட்டம், கும்மிப்பாட்டு, சிலம்பாட்டம், மான் கொம்பாட்டம், நெருப்பு வளையம் சுற்றுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் கலந்து கொண்ட ஆண்களுக்கு வேட்டியும், பெண்களுக்கு புடவையும் வழங்கப்பட்டது. விழாவில் தர்மபுரி எம்.எல்.ஏ. வெங்கடேஸ்வரன், ஒன்றிய குழு தலைவர் கவிதா ராமகிருஷ்ணன், வன்னியர் சங்க மாநில துணை தலைவர் பாடி செல்வம், சாந்தமூர்த்தி, மாவட்ட தலைவர் செல்வகுமார், பொதுக்குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன், மாவட்ட இளைஞரணி செயலாளர் சத்தியமூர்த்தி மற்றும் பென்னாகரம், ஏரியூர் ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள், பா.ம.க. கட்சியினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.