காவேரிப்பட்டணம் பேரூராட்சியில்சமத்துவ பொங்கல் விழா
காவேரிப்பட்டணம்:
காவேரிப்பட்டணம் பேரூராட்சியில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. பேரூராட்சி தலைவர் அம்சவேணி செந்தில்குமார் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் கலந்து கொண்டு பொங்கல் வைத்து பொதுமக்களுக்கு கரும்பு, அரிசி உள்ளிட்டவைகளை வழங்கினார். இதில் நாடாளுமன்ற உறுப்பினர் சுகவனம், மாவட்ட அவைத்தலைவர் நாகராஜ், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் ராஜன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் செந்தில்குமார், ஒன்றிய செயலாளர் சுப்பிரமணி, நகர செயலாளர் பாபு, பேரூராட்சி துணைத்தலைவர் மாலினி மாதையன், மாவட்ட துணை அமைப்பாளர் கோவிந்தசாமி, மாவட்ட பொருளாளர் கதிரவன், கிருஷ்ணகிரி நகர செயலாளர் நவாப், மாநில விவசாய அணி துணை அமைப்பாளர் டேம் வெங்கடேசன், பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார் மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.