புனித பேதுரு ஆலயத்தில் பொங்கல் வைத்து பிரார்த்தனை
சி.கே.மங்கலம் புனித பேதுரு ஆலயத்தில் பொங்கல் வைத்து பிரார்த்தனை நடந்தது.
ராமநாதபுரம்
தொண்டி,
திருவாடானை அருகே சி.கே.மங்கலம் புனித பேதுரு ஆலய புனரமைப்பு பணிகள் மேற்கொண்ட நிலையில் பணிகள் தொய்வின்றி நடைபெற துணை நின்ற அன்னை வேளாங்கண்ணி மாதா, சி.கே.மங்கலம் பங்கின் பாதுகாவலரான புனித பேதுரு ஆகியோருக்கு நன்றி செலுத்தும் விதமாக இறை மக்கள் பொங்கல் வைத்து பிரார்த்தனை செய்தனர். பங்குத்தந்தை சாமுஇதயன் பொங்கல் பானைகளை அர்ச்சிப்பு செய்தார். இதை தொடர்ந்து நடைபெற்ற நன்றி திருப்பலியை அருட்தந்தை சாமு இதயன் தலைமையில் அருட்தந்தையர்கள் ஆனந்த், எட்வர்ட் ஜெயக்குமார் ஆகியோர் நிறைவேற்றினர். இதில் ஏராளமான இறை மக்கள் கலந்து கொண்டு சிறப்பு ஜெபம் செய்தனர்.இதில் பங்கு பேரவை நிர்வாகிகள், சி.கே.மங்கலம் கிராம நிர்வாகிகள், பங்கு கிளை கிராம நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story