அரசு கல்லூரி, பள்ளியில் பொங்கல் கொண்டாட்டம்


அரசு கல்லூரி, பள்ளியில் பொங்கல் கொண்டாட்டம்
x

அரசு கல்லூரி, பள்ளியில் பொங்கல் கொண்டாடப்பட்டது.

அரியலூர்

ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இதில் மாணவர்கள் வேட்டி, சட்டை அணிந்தும், மாணவிகள் சேலை அணிந்தும் பங்கேற்ற பொங்கல் வைத்து கொண்டாடினர். இதில் கல்லூரி முதல்வர் கலைச்செல்வி மற்றும் அனைத்து துறை பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல் விக்கிரமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. விழாவையொட்டி 6 முதல் 12-ம் வகுப்பு வரை ஒவ்வொரு வகுப்பினருக்கும் கோலப் போட்டிகள் நடைபெற்றன. இதில் சிறப்பு விருந்தினராக உடையார்பாளையம் கல்வி மாவட்ட அலுவலர் ஜெயா கலந்து கொண்டு, போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் அறிவழகன், பள்ளி மேலாண்மை குழுவினர், மாணவ, மாணவிகள், ஆசிரிய, ஆசிரியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story