உத்தமபாளையம் பகுதியில் சமத்துவ பொங்கல் விழா


உத்தமபாளையம் பகுதியில் சமத்துவ பொங்கல் விழா
x

உத்தமபாளையம் பகுதியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

தேனி

உத்தமபாளையம் அருகே கோகிலாபுரம் ஊராட்சியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவுக்கு உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. பால்பாண்டியன் தலைமை தாங்கினார். அப்போது அவர், ஊராட்சிகளில் பொதுமக்கள் சமத்துவத்தை பேணி காக்க வேண்டும். அனைவரும் ஒற்றுமையாக, சகோதரத்துவத்துடன் வாழ வேண்டும் என்றார். தாசில்தார் சந்திரசேகர் முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் கருப்பையா, விழாவுக்கு வந்த முக்கிய பிரமுகர்களை சால்வை அணிவித்து வரவேற்றார். இதில், துணைத்தலைவர் பிச்சைமணி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மகேந்திரன், ஊராட்சி செயலாளர் திருப்பதி மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

இதேபோல் ஆனைமலையன்பட்டியில் ஊராட்சி மன்ற தலைவர் மீனா மும்மூர்த்தி தலைமையில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயகாந்தன் முன்னிலை வகித்தார். இந்த விழாவில் பெண்களுக்கு கோலப்போட்டி மற்றும் மாணவர்களுக்கு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. பின்னர் போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் பரிசுகளை வழங்கினார். இந்த விழாவில், கிராம நிர்வாக அலுவலர் கவிதா, ஊராட்சி செயலாளர் சேகர் மற்றும் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

உத்தமபாளையம் அருகே மேலச்சிந்தலைச்சேரியில், ஊராட்சி மன்ற தலைவர் ராஜன் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. துணைத்தலைவர் பாண்டியன் முன்னிலை வகித்தார். விழாவையொட்டி பள்ளி மாணவிகள் மற்றும் பெண்களுக்கு கோலப்போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில், ஊராட்சி செயலாளர் முத்துக்குமரன் மற்றும் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

லட்சுமிநாயக்கன்பட்டியில் உள்ள சமத்துவபுரத்தில், ஊராட்சி மன்ற தலைவர் செல்லப்பா தலைமையில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. பின்னர் போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு, உத்தமபாளையம் ஒன்றியக்குழு தலைவர் இன்பென்ட் பனியஜெப்ரின் பரிசுகளை வழங்கினார். இதில், வட்டார வளர்ச்சி அலுவலர் செண்பகவல்லி, ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பத்மசூர்யா, ஊராட்சி செயலாளர் சுந்தரபாண்டியன் மற்றும் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.


Related Tags :
Next Story