பொங்கல் பண்டிகை: நேற்று சென்னையிலிருந்து 1.34 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்


பொங்கல் பண்டிகை: நேற்று சென்னையிலிருந்து 1.34 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
x

நேற்று முதல் நாளில் சென்னையிலிருந்து 1.34 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம் மேற்கொண்டுள்ளதாக போக்குவரத்துத் துறை தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை,

பொங்கலை சொந்த ஊர்களில் கொண்டாட மக்கள் படையெடுக்க தயாராகி விட்டனர். பொங்கல் பண்டிகையை ஒட்டி நேற்று முதல் தமிழ்நாடு முழுவதும் 16,932 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

சென்னை, கோவை, திருப்பூர், சேலம் போன்ற தொழில் நகரங்களில் இருந்து தென் மாவட்டங்கள் உள்பட அனைத்து மாவட்டங்களுக்கு ஜனவரி 12 முதல் 14 ஆம் தேதி வரையும், ஜனவரி 16 முதல் 18 ஆம் தேதி வரையும் சிறப்புப் பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி நேற்று முதல் நாளில் சென்னையிலிருந்து 1.34 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம் மேற்கொண்டுள்ளதாக போக்குவரத்துத் துறை தகவல் தெரிவித்துள்ளது.

சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2,100 பஸ்களுடன் கூடுதலாக 586 பஸ்கள் என மொத்தம் 2,686 பஸ்களில் 1,34,300 பேர் பயணித்துள்ளனர்.


Next Story