பொங்கல் விழா
பா.ஜனதா சார்பில் பொங்கல் விழா நடந்தது.
வாசுதேவநல்லூர்:
வாசுதேவநல்லூர் தெற்கு ஒன்றிய பா.ஜ.க. சார்பாக நம்ம ஊரு மோடி பொங்கல் விழா, முள்ளிக்குளம் மாரியம்மன் கோவில் முன்பாக கொண்டாடப்பட்டது. 100-க்கும் மேற்பட்ட பெண்கள் பொங்கலிட்டனர். வாசுதேவநல்லூர் தெற்கு ஒன்றிய தலைவரும், சுப்பிரமணியபுரம் ஊராட்சி மன்ற தலைவருமான வக்கீல் ராம்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் பாலகுருநாதன், பொருளாளர் பாலகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் ராமராஜா, மாவட்ட செயலாளர் அர்ச்சுனன், வர்த்தக பிரிவு துணை தலைவர் கருப்பசாமி, இளைஞரணி பொதுச்செயலாளர் சங்கரநாராயணன், ஓ.பி.சி. அணி மாவட்ட பொதுச்செயலாளர் கோதண்டராமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
செங்கோட்டை மேலூர் கே.சி.ரோடு அரசு உயர்நிலைப்பள்ளி மேல்புறம் உள்ள மைதானத்தில் நடந்த விழாவுக்கு பா.ஜ.க. மாவட்ட விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு தலைவர் பொன்னுலிங்கம் தலைமை தாங்கினார். ஓ.பி.சி. அணி மாவட்ட தலைவர் மாரியப்பன், அமைப்புசாரா பிரிவு மாவட்ட துணை தலைவர் பேச்சிமுத்து, மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்ட துணை தலைவர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனா். கூட்டுறவு பிரிவு மாவட்ட செயலாளர் வர்மா.தங்கராஜ் வரவேற்று பேசினார். மாவட்ட தலைவா் ராஜேஷ்ராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ், பரிசுகள் வழங்கி வாழ்த்தி பேசினார்.
கடையம் பாரதீய ஜனதா மேற்கு ஒன்றியம் சார்பில் சின்னத்தேர் திடலில் நடந்த விழாவுக்கு ஒன்றிய தலைவர் செந்தில் குமார் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் கஜேந்திரன், மாவட்ட வக்கீல் பிரிவு தலைவர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.