கிராம பஞ்சாயத்து அலுவலகங்களில் பொங்கல் விழா


கிராம பஞ்சாயத்து அலுவலகங்களில் பொங்கல் விழா
x

முதுகுளத்தூர் ஒன்றியத்தில் கிராம பஞ்சாயத்து அலுவலகங்களில் பொங்கல் விழா நடந்தது.

ராமநாதபுரம்

முதுகுளத்தூர்,

முதுகுளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அனைத்து கிராம பஞ்சாயத்து அலுவலகங்களிலும் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய தலைவர் சண்முகப்பிரியா ராஜேஷ், ஆணையாளர்கள் ரவி, அன்பு கண்ணன் ஆகியோர் தலைமையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

இதைத்தொடர்ந்து கிராம ஊராட்சி மன்ற தலைவர்கள் கீழகாஞ்சிரங்குளம் சண்முகவள்ளி தர்மராஜ் பாண்டியன், செல்வநாயகபுரம் பால்சாமி, ஆதாம் கொத்தங்குடி கதிரேசன், விளக்கநேந்தல் சண்முகவள்ளி சண்முகம், வெங்கல குறிச்சி எஸ்.டி. செந்தில்குமார், பூசேரி வளர்மதி சாந்தகுமார், ஆத்திகுளம் ஆனந்தநாயகி முத்துராமலிங்கம், விளங்குளத்தூர் கனகவல்லி முத்துவேல், கீழத்தூவல் சாத்தாயி திருநாவுக்கரசு, குமார குறிச்சி செந்தில், தேரிருவேலி அபூபக்கர் சித்திக், புழுதிக்குளம் மீனாம்பாள் ஜெயபாலன், கீழக்குளம் ரவிச்சந்திரன், ஆணைசேரி முருகவேல், நல்லூர் தங்கப்பாண்டியன், மைக்கேல்பட்டினம் குழந்தைதெரோஸ் சிங்கராயர், சிறுதலைசெல்வி காசிநாதன், பிரபக்களூர் தீபா நீதிராஜன், மேலகொடுமலூர் சரவணன், திருவரங்கம் அன்னபூர்ணம் பாண்டி, செல்லூர் மகேஸ்வரன் ஜீவன் செல்வராஜ், காக்கூர் ஜெயச்சந்திரன் (சகோ) ஜெயமணி, புளியங்குடி இந்துமதி பாலமுருகன், கீரனூர் ஜோதி முனியசாமி, அலங்கானூர் வினோத் குமார், கீழக்கொடும்பலூர் ரதமணி கணேசன், கருமல் லிதியால் சாந்தகுமாரி, துணைத்தலைவர்கள் ஆதமத்தங்குடி கார்த்திக் ராஜா, பொசுக்குடி முருகன் ஆகியோர் அவரவர் பஞ்சாயத்து அலுவலகங்களில் புதுப்பானையில் பொங்கல் வைத்து கரும்பு, மஞ்சள் கொத்து உள்ளிட்ட பொருட்களை வைத்து சமத்துவ பொங்கல் விழா கொண்டாடினர்.


Related Tags :
Next Story