பொங்கல் பண்டிகை: அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குடும்பத்துடன் மரியாதை


பொங்கல் பண்டிகை: அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குடும்பத்துடன் மரியாதை
x

பொங்கல் பண்டிகை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குடும்பத்துடன் மரியாதை செலுத்தினர்.

சென்னை,

அனைத்து உயிர்களுக்கும் ஆதாரமாக விளங்கும் சூரியனுக்கும், இயற்கைக்கும் உழவுக்கும், நன்றி தெரிவிக்கும் விழாவாக தை மாதம் முதல் நாளான இன்று பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

கொரோனா கட்டுப்பாடு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக உற்சாகம் இழந்த இந்த பொங்கல் விழா தற்போது எந்த கட்டுப்பாடும் இல்லாத நிலையில் களை கட்டியுள்ளது.

இந்த நிலையில், பொங்கல் பண்டிகை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்திற்கு சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினர். அதையடுத்து மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நினைவிடத்திற்க்கு சென்று மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இதில் துர்கா ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி கிருத்திகா ஸ்டாலின் ஆகியோர் உடனிருந்தனர். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேஷ்டி- சட்டை அணிந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.







Next Story