அரசு பள்ளியில் பொங்கல் விழா
பொள்ளாச்சியில் அரசு பள்ளியில் பொங்கல் விழா நடைபெற்றது.
கோயம்புத்தூர்
பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருகே உள்ள கோடங்கிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு சார்பில் பொங்கல் விழா நடைபெற்றது. விழாவில் மாணவ-மாணவிகள் தமிழர்களின் பாராம்பரிய உடை அணிந்து நாட்டுப்புற பாடல்களை பாடியும், கும்மி நடனம் ஆடி பொங்கல் வைத்து உற்சாகமாக கொண்டாடினார்கள். மேலும் தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவிற்கு சிறப்பு சேர்க்கும் வகையில் உழவுக்கு உயிரூட்டு, உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்ற கோஷத்துடனும், தமிழ்நாடு தமிழர்கள் பெருகுக வளம் என்று எழுதப்பட்ட பதாகைகளை கையில் ஏந்தி மாணவ-மாணவிகள் ஊரின் முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக வந்தனர்.
இதில் ஊர் பொதுமக்கள், தன்னார்வலர்கள், மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் தினகரன் செய்திருந்தார்.
Related Tags :
Next Story