அரசு பெண்கள் பள்ளியில் பொங்கல் விழா
அரசு பெண்கள் பள்ளியில் பொங்கல் விழா
கோயம்புத்தூர்
கோட்டூர்
பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் மலையாண்டிபட்டிணம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதில் ஆசிரியர்கள், பள்ளி மாணவிகள் இணைந்து பள்ளி வளாகத்தில் வண்ண கோலமிட்டு புதுப்பானையில் மஞ்சள், குங்குமம் வைத்து மஞ்சள் குலை கட்டி அடுப்பில் வைத்தனர். பின்னர் பசும்பால், புதுநெல் குத்தி எடுத்த பச்சரிசி, வெல்லம் ஆகியவற்றை பானையில் போட்டு சூரியன் இருக்கும் திசையில் பொங்கலிட்டனர். புதுப்பானையில் பொங்கல் பொங்கி வரும் நேரத்தில் பள்ளி மாணவிகள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து பொங்கலோ பொங்கல் என்று உணர்ச்சி கோஷமிட்டனர். மேலும் பொங்கல், காய்கறி வகைகளை கரும்புடன் படைத்து வழிபட்டனர். இதில் ஆசிரியர், ஆசிரியைகள் மற்றும் மாணவிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story