மாரியம்மன் கோவில்களில் பொங்கல் திருவிழா


மாரியம்மன் கோவில்களில் பொங்கல் திருவிழா
x
தினத்தந்தி 18 Jan 2023 12:15 AM IST (Updated: 18 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

வால்பாறை எஸ்டேட் பகுதி மாரியம்மன் கோவில்களில் பொங்கல் திருவிழா

கோயம்புத்தூர்

வால்பாறையில் உள்ள அனைத்து எஸ்டேட் பகுதிகளிலும் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படும். இதை யொட்டி வால்பாறை எஸ்டேட்டுகளில் உள்ள மாரியம்மன், சக்தி மாரியம்மன், சந்தன மாரியம்மன், பூமாரியம்மன் உள்ளிட்ட மாரி யம்மன் கோவில்களில் பொங்கல் விழா நடைபெறும்.

அதன்படி வால்பாறை கல்லார் எஸ்டேட் மாரியம்மன் கோவி லில் பொங்கல் விழா நடைபெற்றது. அந்த கோவில் பக்தர்கள் பூக்குண்டம் இறங்கி அம்மனை வழிபட்டனர். சோலையார் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் அலகு குத்தியபடி தேர்இழுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.

இதனால் மாரியம்மன் கோவில்க ளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. மேலும் பொங்கல் பண்டிகையையொட்டி வால்பாறையில் முக்கிய சுற்றுலா தலமாக விளங்கும் கூழாங்கல் ஆற்றில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் காணும் பொங்கலை சிறப்பாக கொண்டாடினார்கள்.

சுற்றுலா பயணிகள் வருகை காரணமாக போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது. ஆனால் அதை ஒழுங்குபடுத்த போதிய போலீசார் பணியில் ஈடுபட வில்லை. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர்.


Next Story