ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் பொங்கல் விழா


ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் பொங்கல் விழா
x

ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் பொங்கல் விழா

திருப்பூர்

அருள்புரம்

பல்லடம் ஒன்றியம் கணபதிபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி அம்மனுக்கு குளிர்ச்சி விழா மற்றும் பொங்கல் விழா நடந்து வருகிறது. இதையொட்டி கடந்த 7-ந் தேதி இரவு 7 மணிக்கு அம்மன் அழைத்தல் மற்றும் அம்மன் ஆலயத்திலிருந்து புறப்பட்டு குளிர்ச்சி பந்தல் சென்றடைதல் நிகழ்ச்சியும், அதையடுத்து பண்டரி பஜனை நிகழ்ச்சியும் நடைபெற்றது. நேற்று கணபதி ஹோமம், பொங்கல் வைத்தல், பெரியபூஜைஇறுதியாக அம்மன் ஆலயம் திரும்புதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

1 More update

Next Story