4 லட்சத்து 18 ஆயிரம் பேருக்கு பொங்கல் பரிசு வினியோகம்


4 லட்சத்து 18 ஆயிரம் பேருக்கு பொங்கல் பரிசு வினியோகம்
x
தினத்தந்தி 9 Jan 2023 6:45 PM GMT (Updated: 9 Jan 2023 6:46 PM GMT)

4 லட்சத்து 18 ஆயிரம் பேருக்கு பொங்கல் பரிசு வினியோகம் செய்யப்பட உள்ளது.

சிவகங்கை

சிவகங்கை,ஜன.10-

சிவகங்கை மாவட்டத்தில் 4 லட்சத்து 18 ஆயிரத்து 42 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட உள்ளதாக மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்தார்.

பொங்கல் பரிசு தொகுப்பு

பொங்கல் பண்டிகையையொட்டி ரேஷன்கடைகளில் அரிசிபெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்பவர்களுக்கும் ரூ.1000 கொண்ட பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

இதன்படி இந்த பரிசுத்தொகை வழங்கும் நிகழ்ச்சியை சென்னையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து சிவகங்கை மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியின் தொடக்க விழா சிவகங்கை இந்திரா நகரில் உள்ள ரேஷன் கடையில் கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளர் ஜினு வரவேற்று பேசினார்.

4 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள்

பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை கலெக்டர் தொடங்கி வைத்து கூறியதாவது:-

சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் 829 ரேஷன்கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த கடைகளில் முதல்-அமைச்சர் அறிவித்தபடி அரிசி பெறும் அனைத்து குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இதன் அடிப்படையில் சிவகங்கை மாவட்டத்தில் 4 லட்சத்து 18 ஆயிரத்து 42 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய கூட்டுறவு வங்கி வேளாண்மை இயக்குனர் ரவிச்சந்திரன், சிவகங்கை கோட்டாட்சியர் சுகிதா, மாவட்ட வழங்கல் அலுவலர் ரத்தினவேல், துணை பதிவாளர்கள் குழந்தை வேலு பாலச்சந்தர், நாகராஜன், வட்ட வழங்கல் அலுவலர் மகேஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

4 லட்சத்து 18 ஆயிரம் பேருக்கு பொங்கல் பரிசு வினியோகம்4 லட்சத்து 18 ஆயிரம் பேருக்கு பொங்கல் பரிசு வினியோகம்

கலெக்டர் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தவுடன் மாவட்டத்தில் அனைத்து கடைகளிலும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்வு தொடங்கியது. அப்போது இணையதள சர்வரில் பழுது ஏற்பட்டது இதனால் பொருட்கள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கார்டை ஸ்கேன் செய்து பதிவேட்டில் பதிவு செய்து கையொப்பம் பெற்றுக் கொண்டு பொருட்களை வழங்க உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து அனைத்து ரேஷன்கடைகளிலும் பொங்கல் பரிசு தொகுப்பு தாமதம் இல்லாமல் வழங்கப்பட்டது.


Next Story