பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம்


பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம்
x
தினத்தந்தி 10 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-11T00:15:45+05:30)

திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் செய்யப்பட்டது.

திண்டுக்கல்

பொங்கல் பரிசு தொகுப்பு

எரியோடு வடக்கு தெரு, பண்ணைப்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் பச்சரிசி, சர்க்கரை, கரும்பு மற்றும் ரூ.1,000-த்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் செய்யப்பட்டது. இதற்கு எரியோடு பேரூராட்சி தலைவர் முத்துலட்சுமி கார்த்திகேயன் தலைமை தாங்கி, பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கினார். எரியோடு நகர செயலாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். தி.மு.க. நகர துணைச் செயலாளர்கள் வெங்கட்ராமன், சரண்யா, துரைராஜ் மாவட்ட பிரதிநிதி சரவண பெருமாள், பேரூராட்சி கவுன்சிலர்கள் பாண்டி, சித்ரா நடராஜன், வேலுச்சாமி, ராமகிருஷ்ணன், கிளைச் செயலாளர் செல்வமணி, சக்திவேல், வெங்கடசாமி, வேலுச்சாமி, வேலு, முள்ளான் பெருமாள், கணேசன், நீலமேகம், நடராஜ், தி.மு.க. ஒன்றிய இளைஞரணி செயலாளர் செல்வராஜ், கூட்டுறவு சங்க செயலாளர் திருமலைச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதேபோல் அனுமந்தராயன்கோட்டை கூட்டுறவு ரேஷன் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு மாவட்ட தி.மு.க. பொருளாளர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கி, பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்களை பொதுமக்களுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் அனுமந்தராயன்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் நிர்மலா இன்பராஜ், கவுன்சிலர் வெள்ளையம்மாள் ராஜாமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

நத்தம்

நத்தம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி வளாகத்தில் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு முன்னாள் எம்.எல்.ஏ. ஆண்டி அம்பலம் தலைமை தாங்கினார். கூட்டுறவு சார்பதிவாளர் சுப்புலெட்சுமி, தாசில்தார் சுகந்தி, நத்தம் பேரூராட்சி தலைவர் சேக்சிக்கந்தர் பாட்சா, தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் ரத்தினக்குமார், பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேலுச்சாமி எம்.பி. பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்களை பொதுமக்களுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் தி.மு.க. நகர செயலாளர் ராஜ்மோகன், மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்துகுமார்சாமி, கள ஆய்வாளர் கவிதா, கூட்டுறவு வங்கி செயலாளர் துரைராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதேபோல் உலுப்பகுடி, செந்துறை, மங்களப்பட்டி, சிறுகுடி, லிங்கவாடி, பரளிபுதூர் ஆகிய பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.

தொப்பம்பட்டி ஒன்றியம் மரிச்சிலம்பு ஊராட்சியில் உள்ள ஒரு ரேஷன் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்களை பொதுமக்களுக்கு மரிச்சிலம்பு ஊராட்சி தலைவர் சுப்பிரமணி வழங்கினார். நிகழ்ச்சியில் ஊராட்சி துணைத் தலைவர் கயல்விழி பாலசுப்பிரமணி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் வக்கீல் ராசு, பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க தலைவர் செந்தில்நாதன் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story