3,184 காவலர்களுக்கு பொங்கல் பதக்கம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சிறப்பாக பணியாற்றிய 3,184 காவல்துறை, சீருடை அலுவலகர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட உள்ளன.
சென்னை,
தமிழ்நாட்டில் காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறைகளில் பணியாற்றும் பணியாளர்கள் தமது பணியில் வெளிப்படுத்தும் நிகரற்ற செயல்பாட்டினை அங்கீகரித்து ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளன்று தமிழக முதல்-அமைச்சரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு, வழங்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், 2024 பொங்கல் விழாவை முன்னிட்டு 3,184 காவல்துறை மற்றும் சீருடை அலுவலகர்களுக்கு பொங்கல் பதக்கம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி, சிறப்பாக பணியாற்றிய 3,184 காவல்துறை, சீருடை அலுவலகர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட உள்ளன.
Related Tags :
Next Story