பொங்கல் தொகுப்பு வினியோகம் தொடங்கியது.


பொங்கல் தொகுப்பு வினியோகம் தொடங்கியது.
x
தினத்தந்தி 10 Jan 2023 12:15 AM IST (Updated: 10 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி பகுதியில் பொங்கல் தொகுப்பு வினியோகம் தொடங்கியது.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி பகுதியில் பொங்கல் தொகுப்பு வினியோகம் தொடங்கியது.

பொங்கல் தொகுப்பு

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக அரசு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக்கரும்பு மற்றும் ரூ.1,000 ரொக்கம் வழங்கப்படும் என்று அறிவித்தது. மேலும் ரேஷன் கடைகளில் கூட்ட நெரிசலை தடுக்க வீடு, வீடாக டோக்கன் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று முதல் பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி தொடங்கியது. ஆனால் சர்வர் பிரச்சினை காரணமாக அந்த பணி தாமதமாகியது. இதனால் நீண்ட நேரம் பொதுமக்கள் காத்திருந்தனர். குறிப்பாக வயதானவர்கள், பெண்கள் கடும் அவதிப்பட்டனர்.

டோக்கன் இல்லாதவர்கள்

இதுகுறித்து குடிமைப்பொருள் அதிகாரிகள் கூறியதாவது:-

பொள்ளாச்சி தாலுகாவில் 168 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு பொங்கல் தொகுப்பு 93 ஆயிரத்து 929 ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கப்படுகிறது. சர்வர் பிரச்சினை காரணமாக சில கடைகளில் பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி தாமதமாகியது. 12-ந்தேதி வரை டோக்கன் வைத்திருப்பவர்களுக்கும், 13-ந்தேதி முதல் டோக்கன் இல்லாதவர்களும் பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இதேபோன்று வால்பாறை, கிணத்துக்கடவு பகுதியிலும் பொங்கல் தொகுப்பு வினியோகம் தொடங்கியது.


Next Story