பொன்னம்மா காளியம்மன் கோவில் பால்குட திருவிழா
குத்தாலம் அருகே பொன்னம்மா காளியம்மன் கோவில் பால்குட திருவிழா நடந்தது.
மயிலாடுதுறை
குத்தாலம்:
குத்தாலம் அருகே தேரழுந்தூர் கீழையூர் கிராமத்தில் பொன்னம்மா காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் ஆடிமாத பால்குட திருவிழா கடந்த 23-ந்தேதி பந்தக்கால் முகூர்த்தத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான பால்குடம் திருவிழா நேற்றுமுன்தினம் நடந்தது. முன்னதாக தேரழுந்தூர் வேதபுரீஸ்வரர் கோவில் திருக்குளத்தில் இருந்து பால்குட ஊர்வலம் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக மேளதாளம் முழங்க கோவிலை வந்தடைந்தது. பின்னர் அம்மனுக்கு பாலபிஷேகம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து திருவிளக்கு பூஜையும் நடைபெற்றது.
Related Tags :
Next Story