பரமத்திவேலூர் அருகே பொன்னர் சங்கர் கதை பாடும் விழா


பரமத்திவேலூர் அருகே பொன்னர் சங்கர் கதை பாடும் விழா
x
தினத்தந்தி 13 Jun 2023 12:30 AM IST (Updated: 13 Jun 2023 3:53 PM IST)
t-max-icont-min-icon

பரமத்திவேலூர் அருகே பொன்னர் சங்கர் கதை பாடும் விழா நடைபெற்றது.

நாமக்கல்

பரமத்திவேலூர்:

பரமத்திவேலூர் அருகே உள்ள அனிச்சம்பாளையத்தில் 39-ம் ஆண்டாக பொன்னர் சங்கர் வாழ்க்கை வரலாறு குறித்த கதைபாடும் நிகழ்ச்சி கடந்த மாதம் 19-ந் முதல் தொடங்கியது. கடந்த மாதம் 26-ந் தேதி பொன்னர் சங்கர் பிறப்பும், 2-ந் தேதி பொன்னர் சங்கர் திருமண நிகழ்வு குறித்த கதைபாடும் நடைபெற்றது. கடந்த 9-ந் தேதி பொன்னர் சங்கர் படுகளமும், 10-ந் தேதி பொன்னர் சங்கரின் தங்கை தங்காயி புலம்பல் நிகழ்ச்சியும், நேற்று முன்தினம் காலை மாவிளக்கு பூஜை, கிடா வெட்டுதலும், காவிரி ஆற்றில் இருந்து கரகம் பாலித்து ஊர்வலமாக வரும் நிகழ்ச்சியும், மஞ்சள் நீராடலும், இரவு அரங்கேற்ற நிகழ்ச்சியும் நடைபெற்றது. பொன்னர் சங்கர் கதைபாடும் நிகழ்ச்சியில் இளைஞர்கள் கதைக்கு தக்கவாறு கதையில் வரும் பல்வேறு கதாபாத்திர வேடமணிந்து கதாபாத்திரங்களாகவே மாறி நடித்து நாட்டுப்புற கலைகள் அழியாமல் பாதுகாத்து வருவது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story