பொன்னியம்மன் கோவில் திருவிழா
வாணியம்பாடியில் பொன்னியம்மன் கோவில் திருவிழா நடந்தது.
திருப்பத்தூர்
வாணியம்பாடி பொன்னியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. கூழ்வார்த்தல் மற்றும் மேள தாளங்களுடன் அம்மனுக்கு புஷ்ப அலங்காரம், விசேஷ பூஜை, அபிஷேகங்கள், இரவு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதன் பின்னர் பூங்கரக ஊர்வலம், உற்சவர் வீதி உலா நடந்தது. அப்போது பக்தர்கள் பூங்கரகம் மீது பொறி, மிளகு ஆகியவற்றை தூவி தங்கள் நேர்த்தி கடன்களை செலுத்தினர்.
விழாவில் வாணியம்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராம பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
Related Tags :
Next Story